பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என் பிரியத்தை அதனால் நான் குறைக்க மாட்டேன்!.....
kathal sokam
Sunday, January 16, 2011
Saturday, January 15, 2011
Friday, January 14, 2011
மெல்லத் தமிழினிச் சாகும்.. தமிழன் ???????
மார்பில் விழுந்த நீர்த்துளிகள் மாறனை விழித்தெழச் செய்தன. மழை பெய்கிறதோ என நினைத்து மார்பில் சாய்ந்திருந்த மனைவியை பார்த்தபோதுதான் தெரிந்தது மார்பை நனைத்தது கண்ணீரென்று..
"குட்டி அழாதேயடி.. நாங்கள் இண்டைக்கு பாதுகாப்பான இடத்துக்கு போயிடுவம்"
சொல்லிக்கொண்டிருக்கும்போதே "அந்த" பாதுகாப்பான இடத்தை பற்றி எண்ணி மனதுக்குள் வேதனை அதிகரித்தது. நேற்றும் பக்கத்து வீட்டு கணேஷ் அண்ணனின் குடும்பம் கூண்டோடு கைலாசத்துக்கு போய்விட்டது... பொழுது புலர்வதற்கு இன்னும் அரை மணி நேரமிருக்கும்.. இப்போது புறப்பட்டால்தான் போய் சேரலாம்.. சனங்கள் நடக்கத்தொடங்கி விட்டன.
மாறன் ஒரு பொறியியலாளன். சண்டை தொடங்கி சில நாட்களிலேயே வன்னிக்கு வந்து விட்டான். அவன் காதலித்த பூங்குழலி... அவளுக்காக..
இவன் பெற்றோர் சொல்லியும் கேளாமல் அவளை மணமுடித்து நேற்றுடன் இரண்டு வருடங்களாகிவிட்டது. இந்தப் போர்க்காலத்தில் குழந்தை வேண்டாம் என்று அவர்கள் நினைத்த போதிலும் அது முடியாமல் போய்விட்டது. அவள் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணி. அவளை சைக்கிள் இல் வைத்து தள்ளிக்கொண்டு இடம் பெயர்ந்து போய்க்கொண்டிருக்கிறான். நேற்று ஒரு ஆலமரத்தடி, இன்று ஒரு அரச மரத்தடி.. நாளைக்கும் ஒரு புளிய மரமோ வேப்பமரமோ கிடைக்காமலா போய்விடும்..
"குட்டி, எழும்படி சனமெல்லாம் நடக்கத்தொடங்கிற்று"
அவள் கண்களை துடைத்து விட்டு சைக்கிளில் ஏறி இருந்துகொண்டாள்.. டயர் காற்று போய் இரண்டு நாளாயிற்று .
"engineer எண்டால் காரில் கூட்டிப்போவான் எண்டு நினைச்சியா குட்டி?"
"இல்லையப்பா.. நீங்க எனக்க்காகத்தானே வந்தனீங்க, இப்ப இப்படியொரு பிரச்சினயில!!" மீண்டும் அழத்தொடங்கினாள்
"போடி பயித்தியம்.. நீ இல்லாட்டி எனக்கு பயித்தியம் பிடிச்சிருக்கும்.. அது சரி பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கிறது எண்டு நான் முடிவெடுத்திட்டன்.... "வானதி" எப்படி இருக்கு?-"
"பொம்பிள பிள்ளையா?
-"ம்ம் பின்ன ?
-"இல்ல பெடியன் தான் .. உங்கள மாதிரி கறுப்பா.. பெயர் "குட்டி மாறன்"
முகத்தில் சிரித்தாலும் அவன் இன்றிரவை பற்றியும் அவள் பிரசவத்தை பற்றியும் அடி மனதில் சிந்தித்துக்கொண்டு... அவளது கண்ணீரை துடைத்து விட்டு சைக்கிள் ஐ தள்ளலானான்..
சனம் சத்தம் சந்தடி இல்லாமல் நகர்ந்து கொண்டு இருந்தது..
"டமால்"
பின்னால்.. ஒரு ஷெல் ...
ஐயோ ஐயோ என்ர பிள்ளை .. என்ர பிள்ளை .. காப்பாத்துங்கோ என்று ஒரு கிழவியின் குரல்.. சனம் சிதறி ஓடியது.. கிழவியின் மகனுக்கு வயது முப்பது இருக்கும். இவன் அருகில் போக முன்பே அவன் உயிர் பிரிந்து இருந்தது. மீண்டும் ஒரு ஷெல் விழ மனைவியின் ஞாபகம் வரவே..
மீண்டும் மனைவியை சைக்கிள் இல் ஏற்றிக்கொண்டு அதனை தள்ளிக்கொண்டு ஓடுகிறான்..
"அப்பா எனக்கு வயிற்றுக்குள்ள ஏதோ செய்யுது!!"
"எனக்கு நெஞ்சுக்குள்ள ஏதோ செய்யுது "
வியர்வை வடிய மூச்சு வாங்க ஓடுகிறான்...
..............
........................
........
பூங்குழலி இன் கண்கள் திறக்கின்றன.. உடம்பில் இனம்புரியாத ஒரு வலி ..மாற்றம்.. எங்கே மாறன்.. கண்களில் ஒரு வித பயம் பற்றிக் கொள்கின்றது.. பக்கத்தில் யாரது..
"அக்கா எழும்பிட்டீங்களா? நீங்க பிளச்சுட்டீங்க.-"
-"-பிளச்சுட்டேனா-? -மாறன் -??-" பேச குரல் வரவில்லை..
-"மாறன் அண்ணை அங்கேயே முடிஞ்சுது.. என்ர அப்பாவும் அம்மாவும் சரி.. நானும் தம்பியும் தப்பிற்றம். அந்த டாக்டர் தான் உங்கள காப்பாற்றினார்-"
பெட்டிக்கடை கமலி அழுதாள்..
இவளுக்கு தொண்டை அடைத்தது அழுகை வரவில்லை.... இனம் புரியாத வலி மனதை பிழிந்தது.. இதயம் கிழிந்து விட்டதாக உணர்ந்தாள்.. மயக்கம் வந்தது...
......
.....
.....
மீண்டும் கண்கள் திறக்கின்றன.. ஐயோ மாறன்.......
"அம்மா எப்படி இருக்கீங்க ?"
யாரது?? கையில் கறுப்பு கயிறுடன்.. எமனா? அப்பாடா, மாறனிடமே என்னையும் கொண்டு போங்கோ.. அவர் கயிறை நெஞ்சில் வைத்து பாக்கிறார்.. ஐயோ இவன்தான் என்ர உயிரை காப்பாத்தின டாக்டர்... கொலைகாரன்..
என்ர குழந்தை... என்ர குழந்தை எங்கே..??
வயிற்றை தடவ கையை எடுக்கிறாள்
என்ர கை எங்க? ரெண்டு கையும் இல்லையா?
"அம்மா பொறுங்கோ.."
டாக்டர் தன்னை பரிதாபமாக பார்ப்பது தெரிந்தது.. அவரது உச்சரிப்பில் இருந்து அவர் சிங்களவராக இருக்க வேண்டும் என்று தெரிந்தது..
" உங்களுக்கு ரெட்டை பிள்ளை பிறந்திருக்கு"
"ம்ம்.. டாக்டர் நான் பிள்ளைக்கு பெயர் வைக்கோணும்"
அரை மயக்கத்தில் அனுங்கினாள்..
-"என்ன?"
-"பெயர் வைக்கோணும்"
டாக்டருக்கு புரியவில்லை.. பக்கத்தில் நிண்ட கமலிக்கு புரிந்துவிட்டது..
-"ஐயா அக்கா பிள்ளைகளுக்கு பெயர் வைக்க வேணுமாம்.. ஐயோ நீங்க ரெண்டு கையையும் ரெண்டு காலையும் எடுத்ததுல ஏதோ நடந்துட்டு ..-"
என்று பயத்துடன் சொன்னாள் கமலி
டாக்டர் கமலியை முறைத்தார்.
"நீங்க சொல்லுங்க அம்மா- என்ன பெயர் வைக்க?"
-கமலி பேச முடியாமல் முகத்தில் முகமூடி இருந்தது.. டாக்டர் அதனை எடுத்து விட்டார்.. பூங்குழலி மெல்லிய குரலில் அனுங்கினாள்
-"உங்களுக்கு தெரியாதா டாக்டர்.. எண்ட பிள்ளைகளாவது நல்ல வாழக்கூடிய மாதிரிஏதாவது "சில்வா" "பெரேரா" எண்டு ஏதாவது நல்ல பேரா....-"
"நர்ஸ் Emergency trolley...."டாக்டர் பதறினார்..
அவள் உயிர் மெல்ல பிரிந்தது..
டாக்டர் மனதுக்குள் அழுததை அவர் முகம் காட்டி கொடுத்தது..

சாபக்கேடு
அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெற்றோல் தட்டுப்பாடு வரிசையில் நின்று எனது உந்துருளிக்கு பெற்றோல் நிரப்பினேன் அப்போது தான் ஒன்று தோன்றியது. யாழ் மக்களின் வாழ்வியலில் பல ஆற்றமுடியாத நோய்கள் வேரூன்றி போயிருக்கிறது.வாழ்கை முழுவதும் ஓடி ஓடியே நிம்மதி தேடிய மக்களின் மன உளைச்சலின் விளைவாக கூட இது இருக்கலாம்.
எங்களுக்கு எதுவும் இலகுவாக கிடைத்திருக்க வில்லை. இருக்க இடம் குடிக்க தண்ணீர் தொடங்கி பயண அனுமதி (டோக்கன் கிளியரன்ஸ்) வரை நின்று நின்று நொந்த கதைகளை எங்கள் கால்கள் சொல்லும்.
குழாய்கிணற்றில் தண்ணீருக்கு, லொறியில் வரும் பாணுக்கு, சங்ககடையில் அரிசி,மா,சீனி,பருப்புக்கு,பலசரக்குகடையில் பால்மாவுக்கு மண்எண்ணெயக்கு, விதானையிடம் கூப்பன் காட்டுக்கு, பயண அனுமதிக்கு பின்னர் பேருந்துக்கு கப்பலுக்கு அந்தந்த இடங்களில் தேனீர்விடுதிக்கு என ........ நீண்டு செல்கிறது இந்த பட்டியல்.....
நாங்கள் வரிசையில் நிற்காமல் எதை பெற்றிருக்கிறோம்........
எங்கள் விதி அப்படி.. ஆனால் எங்கள் செயற்பாடுகள் தான் மிகக்கொடுமை.
ஒரு வரிசையில் ஒழுங்காக நின்று வந்த வேலையை விரைவாக முடித்து செல்லும் எண்ணம் எவருக்கும் வருவதில்லை. நீ முந்தி நான் முந்தி என்று யார் முந்துவது என்பது தான் பிரச்சனை, ஒரு வரிசையில் ஆரம்பித்தது இரண்டாகி மூன்றாகி தேவையற்ற ஒரு நெரிசல் உருவாக்கப்பட்டிருக்கும்.
நல்ல உதாரணம் வவுனியா பிரயாணம் தான்....
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருந்த பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) தளர்த்தப்பட்டிருப்பது நிம்மதியை தந்தாலும் இன்று வரை இந்த நான்கு ஆண்டுகளில் இந்த யாழ் - பிறமாவட்டங்களுக்கான பயணம் விழுங்கியுள்ள நேரம்....
யாழ்-திருகோணமலை கப்பல் பயணத்தைப்பற்றி சொல்ல விரும்பவில்லை அந்த கொடுமையை அனுபவித்து தான் பாரத்திருக்க வேண்டும் தவறவிட்டவர்களுக்கு இனி சந்தர்ப்பம் இல்லை.
கிளியரன்ஸ் பெறுவதற்கு - இரண்டு கிழமை
இதைதவிர காலையில் ரயில்வே நிலையத்தில் 1 மணித்தியாலம்
பின்னர் சிங்கள மகா வித்தியாலயத்தில் மூன்று மணித்தியாலம்
பயணம் மூன்று மணித்தியாலம்
இவ்வளவும்143 km நீளமான ஒரு சிறிய தூரத்தை கடப்பதற்கு சாமானியன் படவேண்டிய துன்பங்கள். A9 பயணமென்பது ஒரு சாகசம்.
வவுனியா செல்வதற்கு நிற்கும் இடத்தில் பெரிய வரிசை ஒன்று இருக்கும் எல்லோரும் முதலில் பதிந்து விட்டுதான் வருவார்கள் ஒருவரையும் திருப்பி அனுப்பவது கிடையாது. ஆனாலும் எங்கள் சனம் அடிபடும் எங்கு செல்வதற்கு 300 மீற்றர் தூரத்திலுள்ள இன்னொரு இடத்திற்கு செலவதறகு அங்கு சோதனைக்காக இறக்கி விடுவார்கள்.பிறகு இன்னொரு வரிசை....
போகும் வழியில் பன்னிரண்டு பேருந்துகளும் ஒரு இடத்தில் தேனீருக்கு ஒரே நேரத்தில் நிறுத்தப்பட அந்த கடையில் ஒரு குருக்ஷேத்திரமே நடக்கும். எத்தனை பேர் பட்டினி கிடந்து வருகிறார்கள்..? ஒரு இரண்டு மணித்தியாலத்தில் அப்படி என்ன பசி...?
நணபன் ஒருவன சொன்னான் 'சனம் கேவலமாக நெரிபடுதுகள்' என்று. பதினெட்டு மணித்தியாலம் கப்பல்ல காயஞ்சு போன சனத்துக்கு நான்கு மணி நேரம் வயித்த நிரப்பாமல் இருக்கமுடியாமல் போவது ஏன்...?
இல்லை அடிபட்டு இடிபட்டு வாங்கி தினபதில் தான் ஒரு திருபதியோ தெரியவில்லை...!
ஐந்து பேருந்துகளையும் ஒரு கடையில் நிறுத்தியவனை குறை சொலவதா வரிசையில் நின்றே வாங்கி பழகாத எம் மக்களை குறை சொல்வதா...?
இதை விட பெரியவரலாறு ஆரம்ப காலத்தில் கப்பலில் சென்றவர்களிடம் கேட்டால் தெரியும்....!
யார் போட்ட சாபம் எப்போது திருந்த போகிறோம்...!
"தனக்கு தனக்கு என்றால் படக்கு படக்கு என அடிக்கும்" சுளகு போல தன்னுடைய காரியம் என்றால் எத்தனை ஆவேசம் எத்தனை பலம் எம்மக்களுக்கு. இத்தனை பலமும் இத்தனை வேகமும் ஒரு நோக்கத்திற்காக ஒரே திசையில் செலுத்தப்பட்டால் எங்களால் அடைய முடியாதது எதுவும் இல்லை.ஆனால் நாங்கள் தான் சுயநலத்திற்கு உதாரணமானசபிக்கப்பட்ட தமிழர்கள் ...! அல்லவா எப்படி முடியும்..?
நானும் இரண்டு நணபர்களும் கந்தசாமி படம்பார்க்க ஒரு திரையரங்கிறகு சென்றோம். அந்த திரையரங்கில் அண்ணளவாக நாநூறு இருக்கைகள் இருக்கும். வந்த கூட்டமோ (யாழ்ப்பாணத்தின் வளர்ந்து வரும் தலைமுறை ) ஒரு நூறுதான், "போட்ட அட்டகாசம்"..... வெறுத்து போனது...!
ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு இறுதியாக போய் நான் மூணு இருக்கைகளில் உட்காந்து படம் பாரத்தேன். இருந்தது ஒரு ஒன்று இரண்டு கால்களுக்கும் ஒவ்வொன்று.
சின்னவன்(கள்)
காலை 7.30 மணி அவசர அவசரமாக எனது மோட்டார் வண்டியை ஸ்ரார்ட் செய்து புறப்பட தயாரானபோதுதான் அது நடந்தது கர்ர்ர்ர்ர்…. என்று ஒரு சத்தம் வண்டியிலிருந்து எனக்கு ஒன்றுமே புரியவில்லை அடப்பாவி மூணு மாசமா கவனிக்காம விட்டதுக்கு இப்பிடியா பழிவாங்கணும் என எண்ணியபடியே எனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் பிரயோகித்து பார்த்தேன் அடங்கவில்லை வண்டி. சரி .. நம்மால முடியாது எங்காவது வண்டி வைத்தியசாலையில்தான் அனுமதி பண்ணவேண்டும் இந்த காலை வேளையில் எவன் திறந்திருப்பான் …? என்று எண்ணிய போதுதான் எனது வீட்டிலிருந்து சிறிய தூரத்திலேயே ஒரு புண்ணியவான் தனது வீட்டோடு சேர்த்து ஒரு மோட்டார் வண்டி திருத்தும் நிலையம் நடத்துவது நினைவுக்கு வந்தது. அப்பாடா என்று ஆசாமியை அவசர அவசரமாக அங்கு அனுமதி செய்தேன் வாசலிலேயே வரவேற்ற திருத்துனர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து..
சின்னவன் … சின்னவன்…. ………… அந்த சாவிகளை எடுத்து வாடா ………… கழற்றடா கெதியா கெதியா……. உத்தரவுகளை பிறப்பித்தார் …
அப்போதுதான் அந்த சின்னவனை நான் கவனித்தேன்..!!
ஏற்கனவே இங்கு சிறுவர்களை வைத்துத்தான் வேலைவாங்கப்படுவதாக கேள்விப்படிருக்கிறேன் ஒருபோதும் வந்தது கிடையாது எனது வண்டிக்கு பிடித்த வைத்தியர் தூரத்தில் இருக்கிறார் அவரிடந்தான் பெரும்பாலும் வண்டியை கூட்டி செல்வது வழக்கம் இப்போது அவசர சிகிச்சை வண்டிக்கு….. பெறவேண்டி இருந்த காரணத்தினால் தான் இங்கு வரவேண்டி இருந்தது.
சிறுவர்களுக்கு கட்டாய கல்வி என்று… எத்தனை பேர்முழங்கினாலும் இங்கெல்லாம் அவை வெறும் வாயளவில்தான் எத்தனையோ சிறுவர்கள் இப்படியாக வண்டி திருத்தும் நிலையங்களிலும். உண்வு விடுதிகளிலும் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அது தெரிந்ததுதான் …
ஆனாலும் இப்போது நான் கண்ட சின்னவனை பார்த்த போது எனக்கு மனதை பிழிந்தது … அவனுக்கு ஒரு பத்து தொடக்கம் பன்னிரண்டு வயதுதான் இருக்கும் தோற்றம் வயதை விட சிறியதாக இருந்தது ஒல்லியான தேகம் வெள்ளை பிஞ்சுகைகள் … எப்படி இந்த கைகளால் இப்படி கடின வேலை எல்லாம் செய்கிறான் …. என்றவாறு அவனை கவனித்தேன் ஆம் !! தனியே கைக்களால் அவனால் முடியவில்லை ஒவ்வொரு நட்டையும் கழற்றும் போது அவன் உடல் பலம் முழவதையும் பிரயோகித்து தான் கழற்றிக்கொண்டிருந்தான் …நட்டுடன் சேர்த்து உடலும் சுழன்றது.. எனக்கு அந்த தடியன் உரிமையாளன் மீது கொடிய கோபம் வந்தது இவனுடைய பிள்ளை என்றால் இப்படி …. என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போதே உள்ளிருந்து …
அப்பா அப்பா ஒரு சிறுமியின் குரல்… என்ன பிள்ளை… நான் வெளிக்கிட்டிட்டன் … சரி கவனமாய் போய்ற்று வாங்கோ …. நான் சின்னவனை பார்த்தேன் எங்கோ வெறித்தபடி இருந்தான். எனக்கு அவன் முகத்தில் ஒன்றையும் காணமுடியவில்லை வெறுமையாக இருந்தது…
அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது உள்ளிருந்து பாடசாலை சீருடையுடன் ஓடி வந்த ஒரு பத்து வயது சிறுமி…அப்பா.. என்ர ஆசை அப்பா…என்று தந்தையை ஆசையுடன் கட்டியணைத்து மூன்று தடவை முத்தமிட்டு போய்ற்றுவாறன்பா… என்ற சொல்லியபடி முதுகில் புத்தகபை குலுங்க துள்ளி குதித்தபடி பள்ளிக்கு சென்றது …
விபரிக்க முடியாத கலவையான உணர்ச்சி என்னிடம் …… கோபமும் அனுதாபமும்… மீண்டும் சின்னவனை பார்த்தேன் அவன் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை அவனுக்கு இது புதிதாக இருக்காது பின்னணியில் மீண்டும் அதே குரல் சின்னவன்… என்று அதட்டியபடி இருக்க அவன் எழுந்து உத்தரவுகளை கவனிக்க சென்றான்… சரி தம்பி இனி பிரச்சனை இல்லை.. என்ற படி என்னருகே வந்த அந்த உரிமையாளரை ஒரு மாதிரி பார்த்து விட்டு புறப்பட்டேன்…
போகும் வழியில் சிந்தனை முழுவதும் அந்த சின்னவனிடமேயே இருந்தது .. இவனுக்கு பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று ஆசை இருக்காதா …?
இப்படி இவனை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு ஏன் பெற்றோர்கள் அனுப்புகிறார்கள் ..?
பெற்றோரை இழந்தவனாக இருப்பானா..? குடிகார அப்பனுக்கு பிறந்திருப்பானா..?
ஒரு வேளை இவனுக்கு இன்னும் பல தம்பி தங்கைகள் இருக்க அவர்கள் படிக்கவேண்டும் என்று இவன் தன் படிப்பை தியாகம் செய்திருப்பானா..?
எனக்கு இப்படி சிறுவனை வேலைவாங்கும் அந்த திருத்துனரின் மேல் வந்த கோபம் நியாயமானதா..?
ஒரு வேளை நீ வேலைக்கு வரவேண்டாம் பள்ளிக்கு போ என்று சொல்லி நிறுத்திவிட்டால் அந்த சிறுவனின் குடும்பத்தின் நிலை என்ன..?
இவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ சின்னவன்கள் எங்கள் சமூகத்தில் எவரும் எதுவுமே செய்ய முடியாது. இவன் வருத்தமெல்லாம் வளரும் வரை மட்டுந்தான் வளர்ந்து இவனும் ஒரு மோட்டார் வண்டி திருத்து நிலையம் வைத்து வாழ்க்கையில் நன்றாக வருவான். இவன் இன்று கஸ்டப்படுவது … ஒரு வித்ததில் ஒரு தொழிற்பயிற்சி .. அந்த உரிமையாளர் இவனை கொடுமைப்படுத்தாதவரை… இந்த ஒரு பதிலை தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை என்னிடம்
உடைந்து போன இரவு
Subscribe to:
Posts (Atom)