kathal sokam

Saturday, January 8, 2011

மண வாழ்க்கை தத்துவங்கள் -


1. மண வாழ்க்கையும் நண்பர்களுடன் சிற்றுண்டி செல்வதும் ஒன்று -

உங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்துவிட்டு உண்ண தொடங்கும்போது அவர்கள் ஆர்டர் செய்த உணவு உங்களுக்கு வேண்டுவதை போலே

- அடுத்தவன் பெண்டாட்டி சாதுவோ என்று பிரமை !

2. மேன்: டாக்டர், அதிக நாள் வாழ வழி சொல்லுங்களேன் ?
டாக்டர்: கல்யாணம் செய்துக்கொள்.
மேன்: கல்யாணம் உதவி செய்யுமா டாக்டர் ?
டாக்டர்: இல்லை, அதிக நாள் வாழும் எண்ணம் உனக்கு அறவே போய்விடும்

3. ஏன் கல்யாணத்தின் போது கல்யாண ஆணும் / பெண்ணும் கையை பிடித்து கொண்டு நெருப்பை வலம் வருகின்றார்கள் ?
மண-தத்துவ நிபுணர்: குத்து சண்டைக்கு முன் குத்து சண்டை வீரர்கள் கை குலுக்கி கொள்வதில்லையா ?

4. மனைவி: டார்லிங், இன்னிக்கு நமக்கு 10-வது திருமண நாள். என்ன செய்யலாம் ?
கணவன்: பேசாமல், இரண்டு நிமிடம் மௌனாஞ்சலி இருப்போம்.

5. கல்யாண தத்துவங்கள்:
"கேனை" என்று முடிவான பிறகு, காதலித்து கல்யாணம் செய்வது நல்லதா அல்லது பெற்றோர் பார்த்துவைத்த நடக்கும் திருமணமா என்று பிறகு என்ன "விளக்கெண்ணை" விழக்கம் !
இருந்தாலும் இதோ - "ஒன்று தற்கொலை" மற்றொன்று "கொலை".
ஒரு பெண் உங்களை இந்த உலகுக்கு அழுதுக்கொண்டே பிறக்க வைக்கிறாள். இன்னொரு பெண் அதை வாழ் நாள் முழுவதும் தங்கு தடை இல்லாமல் நீடிக்கிறாள் !!

6. புதுதாக கல்யாணம் செய்துக்கொள்ள போகிறவர்: உங்களிடம் "Man, the Masters of Women" என்ற புத்தகம் இருககின்றதா ?
புத்தக கடை விற்பனை பெண்: சார், Fiction புக்ஸ் எல்லாம் அந்த பக்கம் ஆறாவது வரிசையில் பாருங்கள்.

7. நாய்கள் ஏன் திருமணம் செய்து கொள்வது இல்லை ?
அவை ஏற்கனவே நாய் வாழ்க்கை வாழ்கின்றன

8. கல்யாணத்திற்கு முன்: உன்னை காதலித்து கைப்பிடிக்க நான் எந்த நரக வேதனையும் அனுபவிக்க தயார்.
கல்யாணத்திற்கு பின்: இதை விட நரக வேதனை ஒன்றும் பெரிதாக இருக்காது. அதற்கே போயிருக்கலாம்

   ** RAENUSHAN **

No comments:

Post a Comment