குறித்த நபர், துணிச்சல்மிக்க பெண் வைத்தியர் ஒருவரை முத்தமிட முயன்றபோதே மடக்கிப் பிடிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.
மிகநீண்ட காலமாகவே விடுதியில் தங்கியிருந்து இரவில் வைத்தியசாலைக்கு வரும் பெண் வைத்தியர்களை விடுதிக்கும் வைத்தியசாலைக்குமுள்ள இடைப்பட்ட தூரத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் பலவந்தமாக முத்தமிட்டு வருகின்றார் என்ற கிசுகிசு வைத்தியசாலை வட்டாரத்தில் நிலவிவந்துள்ளது.
இந்தநிலையில் அண்மையில் விடுதியில் தங்கியிருந்த சிரேஷ்ட பெண் வைத்தியர் ஒருவர் அவசர அழைப்பின்பேரில் வைத்தியசாலையை நோக்கி விரைந்துள்ளார். அப்போது குறித்த நபர் இருளில் அவரை வழிமறித்துக் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றுள்ளார். எனினும் துணிச்சல்மிக்க அந்த வைத்தியர் புத்திசாதுரியமாக அவரை மடக்கிப்பிடித்துக்கொண்டு கூச்சலிட்டதில் திரண்ட வைத்தியசாலை ஊழியர்களும், ஏனையவர்களும் அந்த நபரைப் பிடித்து தம்புள்ள பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment