கூகுள் தரும் சேவைகளில் தவிர்க்க முடியாத ஒன்று ஜிமெயில் ஆகும். நாம் அனைவரும் ஜிமெயில் உபயோகிக்கிறோம். இந்த ஜிமெயிலில் பல சேவைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த groups.அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மெயில் அனுப்புவது. இந்த வசதியை நிறைய பேர் உபயோகித்து கொண்டு இருக்கலாம். இதை நாம் உருவாக்குவதால் ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயிலை அனுப்பலாம். அதுவும் மிகவும் சுலபமாக ஒவ்வொரு மெயிலாக சேர்க்க வேண்டியதில்லை. பண்டிகை அல்லது விழாக்காலங்களில் வாழ்த்து செய்தியை அனுப்புவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். - உங்கள் ஜிமெயில் எக்கவுண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- பின்பு contacts என்ற பட்டினை அழுத்தவும். அடுத்து கீழே உள்ள NEW GROUP என்ற பட்டினை அழுத்தவும்.
- உங்களுக்கு வரும் வின்டோவில் உங்கள் குரூப்பின் பெயரை கொடுத்து கீழே உள்ள ok என்ற பட்டினை அழுத்தவும்.
- உங்கள் குரூப் உருவாகிவிட்டது. இப்பொழுது அதில் எப்படி நமக்கு நண்பர்களின் மெயில் ஐடீகளை சேர்ப்பது என்று பார்ப்போம்.
- அதே பக்கத்தில் Most contected,other contacts என்று இரு பிரிவுகள் இருக்கும். அதில் நீங்கள் எது வேண்டுமோ அதை கிளிக் செய்யுங்கள்.
- உங்களின் நண்பர்கள் மெயில் ஐடிகள் வரும். அதில் உங்களுக்கு தேவையான நண்பர்களுக்கு நேராக உள்ள கட்டத்தில் ரிக் குறியிட்டு தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- படத்தில் உள்ளவாறு Groups கிளிக் செய்து கொள்ளவும்.
- உங்களுக்கு ஒரு பட்டியல் உண்டாகும். அதில் உங்களுடைய குரூப் தேர்வு செய்து கொள்ளவும்.
- அவ்வளவுதான் நீங்கள் தேர்வு செய்த அனைத்து மெயில் முகவரிகளும் நீங்கள் உருவாக்கிய குரூப்பில் சென்றுவிடும்.
- இப்பொழுது நீங்கள் எப்பவும் போல மெயில் அனுப்ப COMPOSE ஐ கிளிக் செய்யுங்கள்.
- நீங்கள் அனுப்ப வேண்டிய மெயிலை உருவாக்கி கொண்டு TO என்ற இடத்தில் மெயில் முகவரியை கொடுப்பதற்கு பதில்GROUP NAME கொடுக்கவும்.
- அவ்வளவுதான் ஒரே நேரத்தில் அந்த குரூப்பில் நீங்கள் தேர்வு செய்த அனைவருக்கும் சென்று விடும் .
|
No comments:
Post a Comment