kathal sokam

Friday, January 7, 2011

தடுக்க மறந்த கைகள்...........

சலனமின்றிதான் கடந்து
கொண்டிருக்கும் நம் பொழுதுகள்..
சோஃபாவில் அமர்ந்தபடியே
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கையில்..

மெதுவாய் ரிமோட் பட்டன் மாற்ற
எத்தனிக்கையில் மெல்லிய கோபம்
உனக்குள் மலரத்தொடங்கும்.

வெடுக்கென்று பிடுங்கி
உன் விருப்பம் ஆள்வாய்.
என் கையினில் சிக்காதவாறு
உனக்குள் சிறைப்படுத்துவாய்.

அதை தேடுவது போல் உனக்குள்
நுழையும் என் விரல்களுக்கு
அனுமதி மறுப்பாய்.

அமெரிக்கா போல் அத்துமீறி
ரிமோட் இருக்கும் இடம் தவிர்த்து
அத்தனை பகுதிகளிலும்
ஆராயும் என் விரல்கள்.

வேண்டாம் வேண்டாம் என்று
பொய்கோபம் கொண்டவாறே
விரல்களுக்கு வழிவிடுவாய்.

கிறக்கமான கிள்ளல்களும்,
வெளிப்படையான மறைப்புகளும்
நம் விளையாட்டை இன்னும்
சுவாரஸ்யப்படுத்தும்.

தேடவேண்டியதை மறந்து
வேறு எதையோ தேடுவதற்காக
உன்னை நோக்கி நெருங்க
அப்போது வைரமுத்து
நினைவிற்கெட்டினார்.

"தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்"
ஆம்.... தேடலின் முடிவு
ருசிக்கத்தான் செய்தது.

உன் விரல்கள்
ரிமோட்டை மறைக்கவில்லை.
நானும் அதை தேடவில்லை.
ஆனாலும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

சோஃபாவின் வழி ஒரு சொர்க்கம்
சென்று கொண்டிருக்கிறேன்.
அசெளகர்யங்களிலும் சில
செளகர்யங்கள் இருக்கத்தான் செய்கிறது....

எனக்காக ஆரம்பித்த உங்கள் சண்டை
என்னை மறந்து நடந்து கொண்டிருக்கிறதே!
என்று குழப்பத்துடன் நம்மை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது
தொலைக்காட்சி



  ** RAENUSHAN **

No comments:

Post a Comment