kathal sokam

Saturday, January 8, 2011

எண்ஜோதிடம் ......


எண்ஜோதிடம்
3-1-2011முதல்9-1-2011வரை

1,10,19,28ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கார் லாரி போன்ற வாகனத் தொழிற்சாலை நடத்துவோர்கள் இவற்றில் பணி புரிவோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். சுபகாரிய செலவுகள் உண்டாகும்.சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்கள் சம்பந்தமான காதல் போன்ற விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.வேலையாட்களால் மன நிம்மதி உண்டாகும்.குல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லது.புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனசஞ்சலமும் பிரச்சனைகளும் வந்து சேரக் கூடும். தாய் மகன் உறவில் சில பிரச்சனைகள் உருவாகலாம்.தந்தையின் உடல் நிலையில் சில பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான எண்:-6
அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு
சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.


எண் 2
2,11,20,29ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு விபரீத எண்ணங்களால் காவல் துறை தண்டனைக்கு ஆளாக நேரிடும்.வீட்டைப் பழுது பார்த்து கட்டுவீர்கள்.திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர்பாராத பொருட் செலவுகள் உண்டாகும்.தீர்த்த யாத்திரை சென்று வர முயற்சிப்பீர்கள்.வீடு நிலம் சம்பந்தமான அரசுக் கடன் மற்றும் உதவித் தொகைகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் மற்றும் சினிமா,நாடகத் துறை சார்ந்தவர்கள்,கலைஞர்கள் நற்பலன்கள் அடைவார்கள்.விளையாட்டு துறை சாரந்தவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். மனைவிக்கு எதிர் பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.தொலை தூரப் பயணங்களில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான எண்:-5
அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை
அதிர்ஷ்டமான திசை:-வடக்கு
சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்

எண் 3
3,12,21,30ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே ந்த வாரம் உங்களுக்கு கலைத் துறையினர்கள் பரிசுகள் பெறுவார்கள்.மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடக்கும். விபரீதமான எண்ணங்களை விட்டு ஒழிப்பது நல்லது.புதிய பெரிய மனிதர்களின் எதிர்பாராத நட்புக்கள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.திருட்டு போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.மற்றவர்களுக்கு உதவுவதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.அரசியல் வாதிகளால் எதிர் பார்த்த ஆதாயம் கிடைப்பதில் இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.நண்பர்களால் ஆதாயம் இல்லை.மாணவர்கள் கல்வியில் நற் பெயர் எடுப்பார்கள். எதிர் பார்த்த பணம் கைவந்நு சேரும்.கமிசன் தொழில் செய்வோர் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது.பொருளாதார நெருக்கடி வந்து விலகும்.

அதிர்ஷ்டமான எண்:-5
அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை
அதிர்ஷ்டமான திசை:-வடக்கு
சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

எண் 4
4,13,22,31ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தந்தை மகன் உறவில் கவனமுடன் செயல் படவும்.நாட் பட்ட நோய்க்கு புதிய மருத்துவர்களின் உதவியால் தீர்வு கிடைக்கும்.வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.தாயின் உடல் நிலையில் கவனம் தேவை.பொதுநலத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்வீர்கள். காய்கறி பூ பழம் இலை கீரை சம்பந்தமான தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். நண்பர்களால் உதவிகள் ஏதும் இல்லை.கோர்ட் வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளால் சிறிது மன நிம்மதி உண்டு.சகோதரர் குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர் பார்த்த ஆதாயங்களை அடைவீர்கள். தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள்,
மருந்து வியாபாரிகள், ஜவுளி நூல் வியாபாரிகள் நற்பலன் அடைவர்.பொருளாதார விசயங்களில் மன நிம்மதி உண்டாகும்.மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்டமான எண்:-6
அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு
சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

எண் 5
5,14,23ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு .கூட்டுத் தொழில் ஆரம்பம் செய்ய பண உதவிகள் கிடைக்கும்.தாய் வழிச் சொந்தங்களுடன் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுகளுக்குள் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறு பாடுகள் தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள்.வாய் மற்றும் பல் சம்மந்தமான உபாதைகள் வந்து போகும.கை விட்டுப் போன பொருள் சம்பந்தம் இல்லாத நபர்களால் வீடு வந்து சேரும்.தடைப் பட்ட கட்டிட வேலைகள் நடைபெறும்.எதிர் பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.பொதுக் காரியங்கள் சம்பந்தமாக போட்ட திட்டங்கள் நிறை வேறக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்குவதில் பொருட் செலவு உண்டாகும்.பொது தொண்டு நிறுவனங்களை நடத்துவோர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது


அதிர்ஷ்டமான எண்:-9
அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு
அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

எண் 6
6,15,24ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு அண்டை அயலார்களுடன் கவனமாகப் பேசி பழகுதல் சிறந்தது.நெருப்பு ராணுவம் போலீஸ் துறையை சார்ந்தவர்கள்,இணைய தளத்தவர்கள் நற்பலன் அடைவார்கள்.தேவையற்ற காரியங்களில் தவிர்த்தல் நல்லது.உறவினர் வரவால் பணம் சேரும். வெகு காலமாகக் காணாமற் போன நகைகள் மற்றும் பணங்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் உண்டாக கூடிய காலமாகும். மூத்த சகோதர்களால் லாபம் உண்டு. விவசாயிகளுக்கு எதிர் பார்த்தை விட நல்ல லாபம் தரும்.உடம்பில் நரம்பு மற்றும் இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.
தீர்த்த யாத்திரை சென்று வருவீர்கள். நண்பரின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள்.வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்டமான எண்:-3
அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்
அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு
சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.

எண் 7
7,16,25ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு காதல் விசயங்களில் எச்சரிக்கை தேவை.அனாதை சிறுவர்களுக்கு உதவுவதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.உடல் நிலையில் கண் காதுகளில் கவனமுடன் இருக்கவும்.அடுத்தவர் விசயத்தில் அக்கறை எடுத்து அவமான பட நேரிடலாம். புதிய வீடு சம்பந்தமான காரியங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும். ஆடம்பர அலங்கார பொருள்கள் வியாபாரிகள்,சினிமா நாடகத் துறை சார்ந்தவர்கள்,கட்டிட சம்மந்தமான கல்,மணல் மண் செங்கல் வியாபாரிகள் மற்றும் அற நிலையத் துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள்.அநாதைச் சிறுவர்கள் பொது நலத் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வீர்கள்.

அதிர்ஷ்டமான எண்:-8
அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்.
அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
சாந்தி:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

எண் 8
8,17,26 ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உடம்பில் வயிறு மற்றும் சுரம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்.புதிய விளை நிலங்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளது. புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமான நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும்.வட்டித் தொழில் தங்கம்,வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள்,மருத்துவர்கள் லாபம் அடைவார்கள;
நெருப்பு மின்சாரங்களில் கவனம் தேவை.உத்தியோகத்தில் இட மாற்றம் உண்டாகும்.புதிய நிலம் சம்பந்தமான பேச்சுக்களைத் தள்ளிப் போடவும்.நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்டமான எண்:-2
அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
அதிர்ஷ்டமான திசை:-மேற்கு
சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

எண் 9
9,18,27ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய தொழில் ஆரம்பம் செய்வதை தள்ளிப் போடவும்.கண் மற்றும் காதுகளில் நோய் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிற்சில சச்சரவுகள் வந்து நீங்கும்.சுப காரிய நிகழ்ச்சிகளாக வெளியூர் பயணம் உண்டாகும்.குல தெய்வ ஆலயத் திருப் பணிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களுக்களின் மூலம் பணம் வந்து சேரும் எனக் கருதி ஏமாற்றம் அடை வேண்டாம்.குழந்தைகளின் மன மகிழ்ச்சிகளுக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத் துறையினர்கள் லாபமடைவார்கள்.விபரிதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கண்ணாய் இருங்கள்.
மனைவி வழி மூலம் தன வரவு உண்டாகும்..புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் வந்து சேர இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும

அதிர்ஷ்டமான எண்:-8
அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்
அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
சாந்தி:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்..


     &**  RAENUSHAN **&

No comments:

Post a Comment