kathal sokam

Tuesday, January 4, 2011

காதல்

உலகின் எல்லா பூக்களையும்,
ஒரே பூவாய் உணரும் அதிசயம்,
உன்னை கண்டதும் உணர்கிறேன்!

ஏழு வருட அன்றாடத்தில்,
உன்னை எண்ணாத நாட்களை எண்ணுகிறேன்,
உலகின் மிகப்பெரும் இலக்கமாய் பூஜ்யம்!

காதலை அளவிடும் அளவுகோல் கண்டபின்,
என் காதலை அளவிட்டு பாருங்கள்,
"தோல்வி நிச்சயம்",
அறிவியலுக்கு நான் விடும் சவால்!

உலகின் மிகச்சிறிய காதல் கடிதம்,
என் இறுதி மூச்சை பையில் இட்டு,
உன் கையில் இட்டுச்சாகிறேன்,
இது ஏழாம் ஜென்மமாயினும்,
என் காதலை வெற்றிச்சின்னமாக்கிய வரிகள்!

உன் இமைகள் எனை தேடாமல் கடக்கையில்,
நிறத்தை பிரித்தாளும் தன்மையை இழக்கும் என் கண்கள்!
உன் பார்வையை நான் இழக்கையில்,
என் பார்வயையும் சேர்த்துதான் இழந்திருக்கிறேன்!

புதிதாய் ஒரு செடி வளர்த்து,
அதில் வளரும் அத்தனை பூக்களையும்,
உனக்கே கொடுத்திட நினைக்கும் ஒருவனாய் நான்!

கண்ணீர் சொட்டில் வளரும்,
கனவு மரத்தின் ஒற்றைப்பூவே,
அதில் ஒழுகும் தேனே,
கண்ணீரை தேனாய் மாற்றும் வல்லமை உனக்கு!

WITH LOVE.....

'''

No comments:

Post a Comment