kathal sokam

Saturday, January 8, 2011

செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப வேண்டுமா? ...


                                     
தலைப்பை பார்த்தவுடன் என்னடா ஏதோ யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிறது போல சொல்றேன்னு நினைக்க வேண்டாம். இது உண்மைதான். அமெரிக்காவின் நாசா அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செயற்கைகோள் அனுப்ப இருக்கிறார்கள். அதில் உள்ள மைக்ரோசிப்பில் நம்முடைய பெயரையும் இணைத்து அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
 
  • இது வரை 9 இலட்சம் பேரிற்கு மேல் அவர்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். நாம்தான் போக முடியாது நம்முடைய பெயராவது போகட்டும்.
  • இதில் நீங்கள் பங்கு கொண்டதற்கு ஆதராரமாக உங்களுக்கு ஒரு எண்ணும் மற்றும் உங்கள் பெயர் பொருந்திய சான்றிதழும் வழங்குகின்றனர்.
                        
                                                                                                              
  • சரி நாம் எங்களுடைய பெயரை அனுப்புவோமா, அதற்கு முதலில் send your name to mars இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல வின்டோ வரும்.
  • அதில் நான்கு கட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை பூர்த்தி செய்து கீழே உள்ள submit என்பதை அழுத்தவும்..
  • submit அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல வின்டோ வரும்.
  • அவ்வளவுதான் உங்களுடைய பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டது. இதற்கு சான்றாக உங்களுக்கு ஒரு சான்றிதழ் தருவார்கள். மேலே view and print என்ற லிங்க்கை அழுத்தி உங்கள் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
              

அவ்வளவுதான் என்ன சந்தோசமா நீங்க போனா என்ன உங்க பெயர் போனா என்ன.



                              &&**    RAENUSHAN   **&&

No comments:

Post a Comment