கணினியில் பல வகை பைல்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலவற்றையே நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம் .இதனால் தான் நம் நண்பர்கள் இமெயில் மூலமாக ஏதேனும் ஒரு பில் அனுப்புகையிலும் வெப் தளங்களிருந்து ஒரு பைலை இறக்கிய சூழ்நிலையிலும் அந்த பைல் வகை என்ன?அது எதற்கு பயன்படுத்தப்படுகிறது ?எந்த அப்ளிகேஷனில் அவற்றை திறந்து பயன்படுத்தலாம் போன்ற கேள்விகளுக்கு பதிலின்றி தேடுகிறோம். இங்கு சில முக்கிய பைல் வகைகள் அவற்றின் துணைப்பெயர்களுடன் தரப்படுகின்றன. பொதுவாக அவற்றை திறக்கும் அப்ளிகேஷன் பெயரும் உடன் தரப்படுகிறது. .avi வீடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர். .bmp பட பைல் .பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ சொப் போன்ற படங்களை கையாளும் அப்ளிகேஷன்காளில் திறந்து பயன்படுத்தலாம். .cfg கொன்பிகரேசன் பைல் .இதனைத் திறந்து பயன்படுத்தக் கூடாது. .dat டேட்டா அடங்கிய தகவல் பைல்.டேட்டாவினைக் கையாளும் எந்தவொரு அப்ளிகேசனிலும் இதனை திறக்கலாம். .doc டொக்கிமென்ட் பைல் .வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம். .exe எக்சிகியூட்டப்பில் பைல்.புரோக்கிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபிள் கிளிக் செய்தால் அந்த புரோக்கிராம் இயங்கும். .gif பட பைல் .பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ சொப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேசங்களில் திறந்து பயன்படுத்தலாம். .htm இணையத்தளத்தில் வைக்கப்படும் டொக்கிமென்ட்.இன்ரநெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம் . .html இணையத்தளத்தில் வைக்கப்படும் டொக்கிமென்ட்.இன்ரநெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம் . .ini.டெக்ஸ்ட் கான்பிகர் செய்யக்கூடிய பில். நோட்பாடில் திறக்கலாம் .jpeg/jpg பட பில். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ சொப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேசங்களில் திறந்து பயன்படுத்தலாம் . .mov மூவி பைல்.குயிக் டைம் அப்ளிகேசனில் திறக்கலாம் . .mpeg/mpg வீடியோ பைல். குயிக் டைம் மற்றும் விண் ஆம்ப் புரோக்கிராம்களில் திறக்கலாம் .mp3 ஓடியோ பைல்.விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற அப்ளிகேசங்களில் திறக்கலாம். .pdf போர்ட்டபிள் டொக்கிமென்ட் பைல். அடோப் ரீடர் போன்ற pdf பைல்களைத் திறக்கும். எந்த சொப்வயர் புரோக்கிராமிலும் திறக்கலாம். .pps ஸ்லைட்.ஷாபிரசண்டேசன் பைல். பவர் பொயின்ட் புரோக்கிராம்களில் திறக்கலாம். .ppt ஸ்லைட்.ஷாபிரசண்டேசன் பைல். பவர் பொயின்ட் புரோக்கிராம்களில் திறக்கலாம். .sys சிஸ்டம் பைல். திறக்க வேண்டாமே. .txt டெக்ஸ்ட் பைல். நோட்பாடில் திறக்கலாம். .wav ஓடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற ஓடியோ புரோக்கிராம்களில் திறந்து பயன்படுத்தலாம். .xls ஸ்ப்ரெட் சீட் பைல். எக்செல் தொகுப்பில் பயன்படுத்தலாம். .zip சுருக்கப்பட்ட பைல். வின்சிப் புரோக்கிராம் பைல்களை விரித்துக்கொடுக்கும். | ||||
&** RAENUSHAN **& |
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என் பிரியத்தை அதனால் நான் குறைக்க மாட்டேன்!.....
kathal sokam
Saturday, January 8, 2011
கணினியில் உருவாக்கப்படும் பைல் வகைகள் ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment