குளோனிங் முறையில் மனிதனை உருவாக்கும் சாத்தியக் கூறுகள் நெருங்கியிருப்பதை சமீபத்திய விஞ்ஞான உலகம் தெரிவித்துள்ளது. இதை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறதா? புதிய உயிர் வரவின் முறை ஆண்- பெண் சேர்க்கையால் மட்டுமே நிகழும் என்றுதானே நம்பியிருந்தோம்…?
வினா: செழியன், அரசூர்
உழைக்க வேண்டிய முறையில் உழைத்தால் விஞ்ஞானம் எதையும் சாத்திமாக்கும் என்று உணரப்பட்டு அவை நிருபிக்கப்பட்டுவரும் காலத்தில் வாழ்கிறோம். குறிப்பாக 20ஆம் நூற்றாண்டிண் இறுதிப்பகுதியிலிருந்து விஞ்ஞான ஆதிக்கம் பூமியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியுன்னது. அதில் ஒன்றுதான் குளோனிங் வரவு. ஆணின் உயிரணு மூலமாகத்தான் புதிய உயிர் உருவாகும் என்ற நம்பிக்கை முழுமையானதல்ல, உயிரணு இல்லாமலும் புதிய உயிரை உருவாக்கலாம் என்பதே குளோனிங் தத்துவம்.
ஆஸ்திரேலியாவில் டோலியென்ற செம்மறி ஆடு குளோனிங்கால் (நகல் உயிரியாய்) உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குரங்கு, மாடு போன்ற உயிரினங்களும் உருவாக்கப்பட்டன. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட மாட்டிலிருந்து இன்னுமொரு குளேனிங் மாட்டை (நகல் உயிரியாய்) ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கி விட்டனர். மனிதனை உருவாக்குவோம் என்று அறிவித்ததும் உலகம் முழுவதும் கடும் எதிப்பு ஏற்பட்டது.
அ. இருக்கும் மக்கள் தொகையையே தாங்கமுடியவில்லை (இந்த வாதம் போலித்தனமானது என்று முந்தைய பதில்களில் விளக்கியுள்ளோம்) அதைக் கட்டுப்படுத்தவே வழி தேடுகிறோம். இதில் குளோனிங் மனிதர்கள் வேறு உருவானால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று சிலரும்…
ஆ. மரபணுவிலிருந்து நகல் எடுக்கும்போது எந்த மனிதனிடமிருந்து எடுத்தோமோ அவனது முழுத்தன்மையும் குழந்தைக்கு வர வாய்ப்பிருக்கின்றது. (இது குறித்து விஞ்ஞானிகளுக்கு மத்தியில பலத்த கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன) ஒருவேளை அப்படி வந்து விட்டால் அதன் தன்மையை சிந்திக்கவே முடியாமல் போய்விடும் என்று சிலரும் அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக நகல் மனிதனை உருவாக்கும் முறை இன்னும் துவங்கப்படவில்லை. இருப்பினும் உருவாக்கும் வழி அப்பட்டமாக சொல்லப்பட்டு விட்டது.
சிந்திக்கும் திறனும், உண்மையை அறியும் பரந்த மனப்பக்குவமும் உள்ளவர்களுக்கு உயிரணு இல்லாமலும் குழந்தை உருவாகும் என்ற அறிவைப் போதிக்க குர்ஆன் அழைக்கிறது. அதைப்பார்க்குமுன் குளோனிங் என்றால் என்ன? என்பதை விளங்குவோம்.
குளோனிங் முதல் உயிர் டோலி இது எப்படி உருவானது? ஒரு வெள்ளை நிற செம்மறி ஆட்டின் பால் மடியிலிருந்து ஒரு நியூக்லியஸை (மரபணுவை) எடுத்துஇ இன்னெரு ஆட்டிலிருந்து ஒரு சினை முட்டை எடுக்கப்பட்டு அதன் நியூக்லியஸை அகற்றி வெள்ளையாட்டின் மரபணுவை சினை முட்டையில் வைத்து பொருந்துகின்றதா என்றறிந்து, பொருந்தி கொண்டபின் (கருத்தரித்தபின்) அதை செம்மறி ஆட்டின் கருப்பையில் வைத்துவிட்டார்கள் 150 நாட்களுக்குப்பிறகு டோலி பிறந்தது. எந்த ஆட்டிலிருந்து மரபணு எடுக்கப்பட்டதோ ஆந்த ஆட்டைப் போன்றே நகல் எடுத்ததுப்போன்று பிறந்த குட்டி இருந்தது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுதான் முதல் குளோனிங் வரலாறாகும்.
ஒரு பெண்ணாட்டின் வெளிப்புரத்திலிரந்து மரபணுவை (ஜீனை) எடுத்து அதே ஆட்டின் சினை முட்டையில் வைத்து அந்த ஆட்டின் நகலை உருவாக்கலாம். ஒரு மாட்டின் மரபணுவை அதன் கருவறையில் வைத்து அதே போன்று மாட்டை உருவாக்கலாம் என்ற நிரூபணத்தின் அடிப்படையில்.
மனிதனின் மரபணுவிலிருந்து அதே தன்மையுடைய குழந்தையை உருவாக்குவது பெரிய விஷயமல்ல. ஒரு பெரும் சமூகத்திற்கு நேர்வழி காட்ட வந்த இறைவனின் தூதரான ஈஸா(அலை)(ஏசு) அவர்களின் பிறப்பில் இன்றைய குளோனிங்கின் தன்மைகள் எல்லாமும் ஒத்துப்போகக்கூடிய ஆதாரங்கள் குர்ஆனில் கிடைக்கின்றன. தந்தையின்றி ஆணின் உயிரணுவின்றி குழந்தையை உருவாக்க முடியும் என்கிறது குளோனிங்இ மரபணுவின் தன்மைகள் குழந்தைகளிடம் இருக்கும் என்கிறது குளோனிங்.
ஈஸா(அலை) வரலாற்றைப் போதிக்கிறது குர்ஆன்,
தேவதூதர் ஒருவர் மரியம் (மேரி)யிடம் தோன்றி பரிசுத்த புதல்வர் பற்றி நன்மாராயம் கூறுகிறார். (அல்குர்ஆன், 19:19)
அதற்கு மரியம் (மேரி)இ எந்த ஆடவனும் என்னைத் தீண்டவில்லைஇ நான் நடத்தைக் கெட்டுப்போனப் பெண்ணுமில்லைஇ இந்நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாக முடியும்இ எனக்கேட்டார். (அல்குர்அன்இ 19:20)
அன்றுவரை ஏன் நேற்றுவரை இருந்த இயற்கை மரபுப்படி ஒரு ஆணால் மட்டுமே ஒரு பெண்ணைக்கர்ப்பம் தரிக்கச் செய்ய முடியும் என்ற யாதார்த்தக் கோட்பாட்டுடன் மரியம் (மேரி) ஆட்சேபனைத் தெரிவிக்கிறார்.
திருமணத்தின் மூலம் குழந்தை உருவாக வாய்ப்புள்ளதுஇ எனக்கு திருமணமாகவில்லை. ஒழுக்ககேட்டால் குழந்தைபெறும் வாய்ப்புள்ளதுஇ நான் நடத்தைக்கெட்டவளுமல்ல. இரண்டு வழியுமில்லாமல் குழந்தையா? இது சாத்தியமா? என்பதே மரியம் (மேரி) அவர்களின் சந்தேகம். அதற்கு இறைவன் பதிலளிக்கிறான்.
அது அவ்வாறுதான், இது எனக்கு மிகச்சுலபமானதே (உன் வயிற்றில் பிறக்கும் குழந்தையாகிய அவர்) மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாகவும், நம்முடைய அருளாகவும் அவரை ஆக்குவோம். இது விதிக்கப்பட்ட விஷயமாகும், என இறைவன் கூறினான். (அல்குர்ஆன்: 19:21)
” அது அவ்வாறுதான் இது விதிக்கப்பட்ட விஷயம்” என்ற திருக்குர்ஆனின் கூற்றுக்கள் மரபியல் உருவாக்கத்தைத் தீர்க்கமாக அறிவிக்கிறது. இது நடக்கும் என்று கூறும் குர்ஆன், சாத்தியமுண்டு என்பதை அறிவிக்கும் குர்ஆன். அது எப்படி? என்பதை மேரியிடம் விளக்கவில்லை. புரிந்து கொள்ளும் சக்தியிருந்தால் மட்டுமே விளக்குவதால் பலன் கிடைக்கும் அன்றைக்கு ஆண் துணையில்லாமல் குழந்தை உருவாவதே பெரும் வியப்பான விஷயம். அந்த சந்தர்ப்பங்களில் நகல் கருவியலைப் பற்றியெல்லாம் விளக்க முடியாது. அதே சமயம் பிற்கால அறிவு முதிர்ச்சி உள்ளவர்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் அந்த சம்பவம் கூறப்படுகிறது.
இது எனக்கு மிகச்சுலபமானதே என்ற கூற்று, இது இறைவனாகிய என்னால் மட்டுமே நிகழ்த்திக் காட்டப்படும்இ வேறு எவராலும் நிகழ்த்தவே முடியாததல்ல என்னைப் பொறுத்தவரை இது சுலபம்இ மற்றவர்கள் கடும் முயற்சி எடுக்கவேண்டும் என்ற பொருளை பொதித்து வைத்துள்ளது. இறைவன் மிக மிகச்சுலபமாக நிகழ்த்திய ஒரு கருவியல் உண்மையை அறிய மனிதனுக்கு 20 நூற்றாண்டுகள் தேவைப்பட்டுள்ளது.
”அவர் மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாவார்” என்ற உறுதிமொழி இது காலம்வரை ஆன்மீகத்திற்காகவே விளக்கப்பட்டு வந்தது. உண்மையுங்கூட அதுதான். இறைவனையும் அவன் அற்றலையும்இ தன்மைகளையும், பண்புகளையும் தன் பிறப்பின் மூலமாகவும் பிச்சாரத்தின் மூலமாகவும் உலகிற்கு உணர்த்திய இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் பின்பொரு காலம் மீண்டும் வருவார், நீதிமிக்க ஆட்சியை உலகில் சாந்தி, சமாதானத்தைப் புதுபிப்பார், அவர் பெயரால் புனையப்பட்ட கதைகளையும் கறைகளையும் களைவார் என்ற மறுக்க முடியாத விதியின் அடிப்படையில் அவர் மனிதர்களுக்கு ஓர் (ஆன்மீக) அத்தாட்சியாவார்.
அத்தாட்சி என்பதின் விளக்கம் இது மட்டும்தானா மனிதர்களுக்கு அத்தாட்சி என்பதில் ஆன்மீக மனிதர்கள் மட்டும்தான் அடங்குவார்களா- விஞ்ஞான மனிதர்கள் அடங்கமாட்டார்களா என்றெல்லாம் சிந்திக்கும்போது அவருடைய அத்தாட்சி விஞ்ஞான மனிதர்களுக்கும் உரியதுதான் என்பதை இன்றைய குளோனிங் நிருபித்துள்ளது.
மரியம் ஈஸாவைக் கருவுற்று தொலைவிலுள்ள ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டார்.. (அல்குர்ஆன், 19:22)
மரபணுவின் மூலம் குழந்தைகளின் தன்மையைப்பற்றி விஞ்ஞானிகள் இவ்வாறு கருத்துக் கூறுகிறார்கள். அதாவது எந்த வயதுடைய ஆளிடமிருந்து மரபணு எடுக்கப்படுகிறதோ அந்த ஆளுடைய வயதுக்கு ஒத்தத் தன்மைகள் பிறக்கும் குழந்தையிடம் இருக்கும் வாய்ப்புள்ளது (மேலதிக விளக்கத்திற்கு ஜீன் சம்பந்தமான புத்தகங்களைப் படிக்கவும்)
அதாவது 20 வயதுடைய ஒரு ஆளிடமிருந்து மரபணு எடுத்து ஒரு குழந்தையை உருவாக்கினால்இ அந்த 20 வயது ஆளிடமுள்ள உடலியல் சார்ந்த தாக்கங்கள் (பேச்சாற்றல்இ சிந்திக்கும் திறன்இ பாலியல் உணர்வுகள் போன்றவை) அந்தக் குழந்தையிடம் இருக்கும்இ இருக்க வேண்டுமென விஞ்ஞானம் எதிர் பார்க்கிறது. இதைக்குர்ஆன் முற்றாக ஏற்கவுமில்லைஇ முற்றாகப் புறக்கணிக்கவுமில்லை.
மரியம் (மேரி) குழந்தையைப் பெற்றுக்கொண்டு ஊருக்குள் வருகிறார்இ திருமணம் செய்யாமல் குழந்தையுடன் வருவதைக் கண்ட ஊரார்கள் மரியமைத் தூற்றுகிறார்கள். களங்கப்படுத்தப்படும் மரியமின் தூய்மையான கற்பு நெறிஇ பாதுகாக்கப்பட வேண்டுமானால் அன்றைக்கு ஈஸா(அலை) ஏசு பேசுவதைத்தவிர வேறு வழியில்லை. இதுவும் அன்றைக்கு நடந்தேறியது.
மரியமின் ஒழுக்கம் குறித்து அம்மக்கள் சர்ச்சையில் ஈடுபடுகையில்இ மர்யம் தன் குழந்தையின் பக்கம் சுட்டிக்காட்டுகிறார். இந்தத் தொட்டில் குழந்தையோடு எங்களால் எப்படிப் பேசமுடியும் என்று அவர்கள் வினவியபோது…
”நான் இறைவனின் அடிமையாக இருக்கிறேன்இ அவன் எனக்கு வேத ஞானத்தைக் கொடுத்து என்னை அவனுடைய தூதராகவும் ஆக்கியிருக்கிறான்… என் தாயாருக்கு நன்றி செலுத்துபவனாகவும் என்னை ஆக்கியிருக்கிறான்… என்று தொட்டில் குழந்தை பேசியது” (அல்குர்ஆன்: 19:29,30,31)
ஈஸா- ஏசு தொட்டில் குழந்தையாய் பேசியதைப் பார்க்கும்போது. அவர் சம்பந்தமாக இறைவன் பயன்படுத்திய வார்த்தைகளை சிந்திக்கும்போதும்இ மரியம் அவர்களின் மரபணுவிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் உருவாகியிருக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதை விளங்கலாம். ஒருவேளை நாளை குளோனிங் மனிதர்கள் உருவாகிய பிறகு விஞ்ஞானிகள் எதிர்பார்க்கும் இதர தாக்கங்கள்இ அதாவது பாலியல் போன்றவை அந்த மனிதர்களிடம் தென்பட்டாலும் அப்போதும் அது திருக்குர்ஆனுக்கு முரணான தகவலாக இருக்காது. ஈஸா(அலை) அவர்கள் பிறந்தபோது இந்தத் தாக்கங்கள் குறித்து வெளிப்படுத்தும் அவசியம் இல்லாமல் போனதால் குர்ஆன் அதை வெளிப்படுத்தவில்லை என்பதை விளங்கினால் இந்தப்பிரச்சனை நிறைவுக்கு வந்துவிடும் (இறைவன் எல்லாவற்றையும் மிக்க அறிந்தவனாக இருக்கிறான். ) எதிர்காலங்களில் இந்தப் பிரச்சனைகள் குறித்த ஆய்வுகள் இன்னும் விரிவாக வெளிவரும் இன்ஷா அல்லாஹ்
&** RAENUSHAN **&
No comments:
Post a Comment